சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மாவட்ட ஆட்சியர் பதவிக்கு 236 ஆண்டுகள் நிறைவு!
செய்திகள்

மாவட்ட ஆட்சியர் பதவிக்கு 236 ஆண்டுகள் நிறைவு!

🕒 1 செப்., 2026, 03:14 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மாவட்ட ஆட்சியர் பதவிக்கு 236 ஆண்டுகள் நிறைவு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டத்தின் நிர்வாக வரலாற்றில் செப்டம்பர் 1-ம் தேதி என்பது வெறும் காலண்டர் பக்கம் மட்டுமல்ல, அது 236 ஆண்டுகால ஆட்சி நிர்வாகத்தின் ஆவணப் பக்கமாகும். கடந்த 1790-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி பெஞ்சமின் டோரின் நெல்லை மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை இந்த மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற ஆட்சியர்கள், இந்திய வரலாற்றின் முக்கியத் திருப்புமுனைகளில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளனர். 1790-க்கு முன்பு இப்பகுதி ஆற்காடு நவாப் மற்றும் உள்ளூர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி வரி வசூல் உரிமையைப் பெற்ற பிறகு, நிர்வாகத்தை முறைப்படுத்த பெஞ்சமின் டோரினை முதல் கலெக்டராக நியமித்தது. நெல்லை மாவட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு ஆட்சியர்களின் பெயர்கள் முக்கிய நிகழ்வுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன ஜேம்ஸ் விஞ்ச் 1900-களின் தொடக்கத்தில், வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியபோதும், நெல்லையில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தபோதும் விஞ்ச் ஆட்சியராக இருந்தார். இவரது அடக்குமுறை நடவடிக்கைகள் அன்றைய காலகட்டத்தில் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தின. நெல்லை மாவட்ட வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கலெக்டர் ஆஷ். 1911 ஜூன் 17-ம் தேதி, மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதனால் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். மாவட்டப் பிரிவினைகளும் எல்லையும் தொடக்க காலத்தில் திருநெல்வேலி மாவட்ட எல்லை என்பது மிகவும் பரந்ததாக இருந்தது. இன்றைய தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இருந்தன. நிர்வாக வசதிக்காக 1986 அக்டோபர் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. பின்னர், 2019 நவம்பர் 22-ம் தேதி தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. எல்லைகள் சுருக்கப்பட்டாலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகப் பாரம்பரியம் தொடர்கிறது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நெல்லை மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சியராக எம்.எஸ்.சிவராமன், பொறுப்பேற்றார். அதன்பின்னர், மாவட்டத்தின் கல்வி, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்களிப்பு செய்துள்ளனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாடு, தொழில்பேட்டை உருவாக்கம் போன்றவற்றில் அடுத்தடுத்து வந்த ஆட்சியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது இந்த நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டத்தின் தற்போதைய 225-வது ஆட்சியராக ஆனந்த் மோகன், IAS பொறுப்பு வகித்து வருகிறார். அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, அவர் 2026 ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்றுள்ளார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூல் அதிகாரியாகத் தொடங்கி, இன்று மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் மக்கள் பிரதிநிதியாக உருவெடுத்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் பதவி, தனது 236 ஆண்டுகாலப் பயணத்தைத் தடையின்றித் தொடர்கிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔