சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/குவாரி, தோட்டத்தில் மின் வயர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது!
செய்திகள்

குவாரி, தோட்டத்தில் மின் வயர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது!

🕒 11 செப்., 2026, 09:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குவாரி, தோட்டத்தில் மின் வயர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது!

AI Highlights

  • நெல்லை முக்கூடல் அருகே குவாரி, தோட்டத்தில் மின் வயர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

முக்கூடல் அருகே உள்ள இலந்தைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.‌ இவர் சம்பவத்தன்று குவாரி வளாகத்தை சுற்றி பார்த்தபோது அங்குள்ள மோட்டார் அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ காப்பர் வயர்களை காணவில்லை. இதுதொடர்பாக அவர் முக்கூடல் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் பொட்டல் காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (42) என்பவர் தாளார்குளத்தில் ஒரு தோட்டத்தில் பயிர் செய்து வருகிறார். அங்கு சம்பவத்தன்று அவர் சென்றபோது ரூ.13 ஆயிரம் மதிப்பிலான மோட்டாருக்கு பயன்படுத்தும் வயரை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது 2 இடங்களிலும் வயர்களை திருடியது சேரன்மகாதேவி அருகே உள்ள அரசன்குளம் காலனி தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன்(19), தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ஆறுமுகராஜா(26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔