Settings

முகப்பு/நகரங்கள்/வாடகை வீட்டில் தவிக்கும் பழங்குடியின மக்கள்: இலவச மனைப் பட்டா கோரி நாமக்கலில் பரபரப்பு மனு!
நகரங்கள்

வாடகை வீட்டில் தவிக்கும் பழங்குடியின மக்கள்: இலவச மனைப் பட்டா கோரி நாமக்கலில் பரபரப்பு மனு!

🕒 16 நவ., 2026, 09:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாடகை வீட்டில் தவிக்கும் பழங்குடியின மக்கள்: இலவச மனைப் பட்டா கோரி நாமக்கலில் பரபரப்பு மனு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் வசிக்கும் குறவன் பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட பெரியமலை மற்றும் குமாரமங்கலம் பகுதிகளில் வசிக்கும் குறவன் பழங்குடியின மக்கள், இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குறவர் பழங்குடியின குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்குப் போதிய கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றும், தற்போது அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடாகவும் கோரிக்கை விடுத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர். தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔