புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள அற்புத மாதா பெண்கள் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இப்பள்ளியில், தீபாவளிப் பண்டிகையின் போது வெடிகளை பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து ஆலங்குடி தீயணைப்புத் துறையினர் மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தீயணைப்புத் துறையினர் மாணவியருக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவியரைக் கொண்டே பாதுகாப்பாக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவியர் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இத்தகைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி ஏற்பாடுகளைப் பள்ளி நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தது.









