விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் ஊராட்சியில், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர் நல சங்கம், திண்டிவனம் சோழமண்டலம் லயன்ஸ் சங்கம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் பெற்று பயனடைந்தனர். சமூக நலனை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.









