சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?
செய்திகள்

19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

🕒 25 ஆக., 2026, 06:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

AI Highlights

  • 19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கேரளாவைச் சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றார். அவரது பின்னணி மற்றும் சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கஸியா லிஸ் மெஜோ, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில் 52 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அவர் இந்தப் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் கேரளப் பெண் என்ற பெருமையையும் கஸியா பெற்றுள்ளார். மாவேலிக்கரையைச் சேர்ந்த இவர், அபுதாபியில் வளர்ந்தவர். தற்போது சட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சட்ட மாணவி முதல் அழகிப் போட்டி வரை

கஸியாவுக்கு அழகிப் போட்டி உலகம் புதிதல்ல. 2024-ம் ஆண்டு மிஸ் டீன் திவா பட்டத்தை வென்ற அவர், 2025-ம் ஆண்டு ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். 2026-ம் ஆண்டு ‘மிஸ் யுனிவர்ஸ் கேரளா’ பட்டத்தையும் வென்றிருந்தார்.

மாடலிங் மட்டுமின்றி கஸியா பாரம்பரிய நடனத்திலும் ஆர்வம் கொண்டவர். மேலும், மலையாளத் திரைப்படமான ‘ஷைலாக்’ மூலம் நடிப்புத் துறையிலும் அறிமுகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுள்ள கஸியா, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற உள்ள 75-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் ஆகவும், குஜராத்தைச் சேர்ந்த அனுஷ்ரீ சத்வலேகர் இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔