இந்தியா
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*
🕒 25 அக்., 2026, 07:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
* இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டம், பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா திரையரங்கின் பின்புறம் உள்ள தெற்கு பள்ளிவாசல் அருகே, கடந்த 04.07.2026 அன்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பரமக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த கோகுலக்கண்ணன் (25), த/பெ. மாணிக்கண்டன் என்பவர் 1.200 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகள் 8(c) r/w 20(b)(ii)(B)-ன்படி வழக்குப் பதிவு செய்தனர்.
* மேலும், இவர் ஏற்கனவே சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக (HS No.29/25 – C Category) கண்காணிக்கப்பட்டு வந்தவர் ஆவார். இவ்வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிக்கு 110 நாட்கள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

