சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்தநாயக்கன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்தநாயக்கன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 08:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே  கேத்தநாயக்கன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன் பட்டி கிராமத்தில், தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் ஊர்வலமாக சென்று கேத்தநாயக்கன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், த.வெ.க கட்சியின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கேத்தநாயக்கன் பட்டி கூட்டுறவு சங்க செயலாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த போராட்டத்தின் போது தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் கோபால், நாகராஜ், கருத்தப்பாண்டி, சேவுகராஜ், அழகர்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...