Settings

முகப்பு/கல்வி/உயர்கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழிகாட்டுதல்: விருதுநகர் ஆட்சியர் ஷரண்யா அறி அறிவிப்பு!
கல்வி

உயர்கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழிகாட்டுதல்: விருதுநகர் ஆட்சியர் ஷரண்யா அறி அறிவிப்பு!

🕒 10 அக்., 2026, 07:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உயர்கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழிகாட்டுதல்: விருதுநகர் ஆட்சியர் ஷரண்யா அறி அறிவிப்பு!
✨

AI Highlights

  • •2026-27 உயர்கல்வி சேர்க்கை பெற்ற விருதுநகர் மாவட்ட மாணவர்கள் கல்விக் கடன் பெற ஆட்சியர் அலுவலக உதவி மையத்தை அணுகலாம் என ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2026–2027-ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அணுகலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ (CBSE) என அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயின்று, தற்போது உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் கல்விக் கடன் சார்ந்த விவரங்களை எளிதில் அறிந்துகொள்ள இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

  • நேரடி தொடர்பு முகவரி: கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறை, 4-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.
  • தொலைபேசி எண்கள்: 9976903873, 9698810699, 7598510114, 9566389092

கல்விக் கடன் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு நேரில் வந்தோ அல்லது மேற்கண்ட தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔