Settings

முகப்பு/கல்வி/மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
கல்வி

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

🕒 13 அக்., 2026, 05:14 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
✨

AI Highlights

  • •மத்திய அரசின் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு (PM YASASVI) தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனங்களில் (100% தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகள்) நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நிபந்தனைகள்:

  • உதவித்தொகை விவரம்: கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு ரூ.75,000 வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் ஒன்றிய அரசால் வழங்கப்படும்.
  • பெண்களுக்கான ஒதுக்கீடு: இத்திட்டத்தில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பிரிவுகள்: மாணவ, மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • வருமான வரம்பு: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பள்ளித் தகுதி: 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

புதுப்பித்தல் (Renewal): கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உறுதி செய்து, புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்க்க கடைசி நாள் 15.11.2026 ஆகும்.

புதிய விண்ணப்பங்கள்: 2026-27 ஆம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேதி தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in மற்றும் https://socialjustice.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔