Settings

முகப்பு/கல்வி/வலசைப் பறவைகளை வரவேற்கும் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற 400 மாணவர்கள்!
கல்வி

வலசைப் பறவைகளை வரவேற்கும் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற 400 மாணவர்கள்!

🕒 10 அக்., 2026, 09:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வலசைப் பறவைகளை வரவேற்கும் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற 400 மாணவர்கள்!
✨

AI Highlights

  • •உலக வலசை பறவைகள் தினத்தை முன்னிட்டு, பாலாமடை மற்றும் ராஜவல்லிபுரம் குளங்களில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் 400 பேர் பறவை வடிவில் ஒன்றுகூடி, வலசைப் பறவைகளை வரவேற்கும் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பருவமழைக் காலம் தொடங்கவுள்ள நிலைகளில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளுக்கும், தாமிரபரணி நதியை ஓட்டிய குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வெளிநாட்டு மற்றும் வெளியூர் பறவைகள் வலசையாக வருவது ( இனப்பெருக்கத்திற்காக) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நீர்நிலைகளின் முக்கியத்துவத்தையும், பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வாக புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மற்றும் ஏட்ரி – அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவளக் காப்பு மையம் ஆகியவை இணைந்து பாலாமடை மற்றும் ராஜவல்லிபுரம் குளங்களில் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 400 பேர் பங்கேற்று அனைவரும் ஒருங்கிணைந்து குளக்கரையில் பிரம்மாண்டமாக பறவை வடிவில் நின்று, வலசை வரும் பறவைகளை வருக! வருக! எனப் வரவேற்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வலசைப் பறவைகள் சூழியல் செழிப்பின் அடையாளங்களாகவும், பருவமழையின் தூதுவர்களாகவும் திகழ்கின்றன. நமது பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலமே இந்தப் பறவைகளின் வாழ்விடங்களை நாம் தக்கவைக்க முடியும், மேலும் குளங்களில் குடிமகன்கள் பாட்டில்கள் வீசி்செல்வது, குப்பைகளை கொட்டுதல், கழிவு நீரைவிடுதல் போன்ற செயலையும் நாம்செய்கிறோம் , இதனால் பறவைகளின் வருகை குறைய வாய்ப்புள்ளது, சுற்றுச் சூழல் மாசுபடும் எனவே இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். முன்னதாக மாணவ மாணவிகள் குளங்களுக்கு வந்துள்ள பறவைகளை தொலைநோக்கி மூலமும் பார்வையிட்டனர். தற்போது அரிவாள் மூக்கன், கொக்கு , நாமத்தலை கோழி, வாத்து உள்பட பல வகையான பறவைகள் வந்துள்ளன. மேலும் நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔