திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே, வேதிப்பொருளை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றது. இதனையடுத்து, லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு வேதிப்பொருளை மாற்றும் பணியில் ஓட்டுநர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிவு ஏற்பட்டதில், மூன்று பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

