Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/மின்கட்டணத்தை குறைக்க அருமையான வாய்ப்பு: சூரியவீடு திட்ட முகாம்!
பொதுமக்கள் செய்திகள்

மின்கட்டணத்தை குறைக்க அருமையான வாய்ப்பு: சூரியவீடு திட்ட முகாம்!

🕒 16 அக்., 2026, 04:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்கட்டணத்தை குறைக்க அருமையான வாய்ப்பு: சூரியவீடு திட்ட முகாம்!
✨

AI Highlights

  • •பண்ருட்டி எல்.என்.புரத்தில் மின்வாரியம் சார்பில் பிரதம மந்திரி சூரியவீடு இலவச மின்சார திட்ட விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பண்ருட்டி மின்வாரியத்தின் சார்பில் 'பிரதம மந்திரி சூரியவீடு இலவச மின்சார திட்டம்' தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு முகாம் எல்.என்.புரத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மின்வாரியக் கோட்ட செயற்பொறியாளர் வள்ளி தலைமை தாங்கினார். வீடுகளில் சூரிய மின்சக்தி (சோலார்) அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் கட்டணச் செலவைக் கணிசமாகக் குறைப்பது மற்றும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அரசு மானியங்கள், சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நுகர்வோருக்குத் தேவையான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், சுகந்தி, கிளாடிஸ் நித்தியகுமார், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் ஸ்ரீராம் சோலார் பிரதிநிதிகள் சிவக்குமார், வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔