Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்: முந்திரி, மரவள்ளி சாகுபடி கருத்தரங்கம்
பொதுமக்கள் செய்திகள்

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்: முந்திரி, மரவள்ளி சாகுபடி கருத்தரங்கம்

🕒 16 அக்., 2026, 04:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்: முந்திரி, மரவள்ளி சாகுபடி கருத்தரங்கம்
✨

AI Highlights

  • •வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முந்திரி மற்றும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் முந்திரி மற்றும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை மாவட்ட துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்பு உரையாற்றினார். இக்கூட்டத்தில் வட்டார உதவி இயக்குனர்கள் நல்லூர் அலெக்ஸ், மங்களூர் அருள்தாசன் மற்றும் மங்களூர், நல்லூர் ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில், திருவனந்தபுரம் கிழங்கு பயிர்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், பாளூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சேலம் சேகோசேர்வ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆகியோர் முந்திரி மற்றும் மரவள்ளி சாகுபடி குறித்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தனர்.

மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் தோட்டக்கலை பயிர்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔