கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. தலைமை தாங்கிய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பொதுமக்களிடம் இருந்து 874 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவிட்டார்.
தொடர்ந்த, திருநங்கைகள் 9 நபர்களுக்கு, இலவச மனைப்பட்டாவிற்கான உத்தரவு வழங்கப்பட்டது. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் மூலம் ஒருவருக்க ரூ.41,500 உதவித் தொகைக்கான காசோலையும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுதொழில் தொடங்க 5 பயனாளிகளுக்கு ரூ.64 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, பிற்பட்டோர் நல அலுவலர் தமிழ்கனி, உதவி ஆணையர் (கலால்) ராணி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

