Settings

முகப்பு/நகரங்கள்/வாணியம்பாடி: உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
நகரங்கள்

வாணியம்பாடி: உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

🕒 24 அக்., 2026, 03:58 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாணியம்பாடி: உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மன உளைச்சல் காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (27). கட்டிடத் தொழிலாளியான இவர், தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு தனிமையில் வசித்து வந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், மன உளைச்சல் காரணமாக நேற்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வல்லரசு, முதலில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔