Settings

முகப்பு/நகரங்கள்/பேருந்து நிழற்கூடங்கள் மது அருந்தும் இடமாக மாறுவது சரியா? பொதுமக்கள் வேதனை
நகரங்கள்

பேருந்து நிழற்கூடங்கள் மது அருந்தும் இடமாக மாறுவது சரியா? பொதுமக்கள் வேதனை

🕒 24 அக்., 2026, 02:34 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பேருந்து நிழற்கூடத்தில் மர்ம நபர்கள் பகலில் மது அருந்துவதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பேருந்து நிழற்கூடத்தில் மர்ம நபர்கள் பகல் நேரங்களிலேயே மது அருந்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு அதிக அளவில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔