திருவாரூர் மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலயம் குளப் பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள், பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை (ஹெட்லைட்) எரியவிட்டவாறு செல்கின்றன.
இந்தக் கடுமையான பனிப்பொழிவால், அன்றாடப் பணிகளுக்குச் செல்வோரும், நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மாவட்டத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் சம்பா நெல் சாகுபடிப் பணிகளிலும் பனிமூட்டத்தின் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

