Settings

முகப்பு/நகரங்கள்/திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு!
நகரங்கள்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு!

🕒 27 அக்., 2026, 11:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு!
✨

AI Highlights

  • •திருச்சி மாவட்டம் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம், வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (அக்டோபர் 28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் ஏ.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, இந்த மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வையம்பட்டி, கருங்குளம், பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, பண்ணப்பட்டி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி, ப.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, குளத்தூரம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம் மற்றும் பொன்னணியாறு டேம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களது மின் தேவைகளை இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொண்டு, மின் வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔