Settings

முகப்பு/நகரங்கள்/புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிரடி கடன் உதவி: நாமக்கல் கலெக்டர் வழங்கிய குட் நியூஸ்!
நகரங்கள்

புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிரடி கடன் உதவி: நாமக்கல் கலெக்டர் வழங்கிய குட் நியூஸ்!

🕒 27 அக்., 2026, 12:13 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புதிய தொழில் முனைவோர்களுக்கு அதிரடி கடன் உதவி: நாமக்கல் கலெக்டர் வழங்கிய குட் நியூஸ்!
✨

AI Highlights

  • •நாமக்கல்லில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமில் 186 தொழில் முனைவோர்களுக்கு ரூ.57.09 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஒப்புதலை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமில், 186 தொழில் முனைவோர்களுக்கு ரூ.57.09 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஒப்புதல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் பேசுகையில், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது என்றார். மேலும், விளிம்பு நிலை மக்களுக்கும் அரசின் திட்டங்கள் விரைவாகச் சென்று சேர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வங்கிகள் மூலம் 143 MSME நிறுவனங்களுக்கு ரூ.54.10 கோடி கடன் ஒப்புதலும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (TWEES) கீழ் 43 புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2.99 கோடி என மொத்தம் 186 பேருக்கு ரூ.57.09 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான ஒப்புகைகள் வழங்கப்பட்டன.

புதிய தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொழில் திட்டங்களைத் தயாரித்தல், நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற விவரங்களைப் பெற, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 04286-290102 என்ற தொலைபேசி எண் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதுநிலை கடன் ஆலோசகர் வணங்காமுடி, முதன்மை வங்கி மேலாளர் சரவணன், கனரா வங்கி மாவட்ட மேலாளர் ஜெய்சங்கர், முதுநிலை மேலாளர்கள் சிவசண்முகம் மற்றும் விஷ்ணுதேவன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சகுந்தலா உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔