Settings

முகப்பு/நகரங்கள்/மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!
நகரங்கள்

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!

🕒 23 நவ., 2026, 02:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பழைய இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து சிவகங்கையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட மின் விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் அமைந்துள்ள பாரத் மெட்டல் மற்றும் பழைய இரும்புக் கடையில், சிவகங்கை மாவட்டம் பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (32) என்பவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குளித்துவிட்டு வந்த சத்யராஜ், தனது அறையில் இருந்த மின்விளக்கு சுவிட்சை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளி ஈஸ்வர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சத்யராஜுக்கு லதா என்ற மனைவியும், அஸ்மிதா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகைநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

Muralidharan🕒 நவ. 23
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனுநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

Muralidharan🕒 நவ. 23
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
தீபத் திருவிழா விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!செய்திகள்

தீபத் திருவிழா விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

Vijay🕒 நவ. 24
எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்செய்திகள்

எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

Arivazhagan🕒 நவ. 24
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔