Settings

முகப்பு/நகரங்கள்/வயலில் மேய்ந்த பசுமாடு மீது அறுந்து விழுந்த மின்கம்பி - பரிதாப சாவு!
நகரங்கள்

வயலில் மேய்ந்த பசுமாடு மீது அறுந்து விழுந்த மின்கம்பி - பரிதாப சாவு!

🕒 27 அக்., 2026, 01:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வயலில் மேய்ந்த பசுமாடு மீது அறுந்து விழுந்த மின்கம்பி - பரிதாப சாவு!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்றம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மேஸ்திரி. இவர் வளர்த்து வந்த பசுமாடு அப்பகுதியிலுள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்து எதிர்பாராதவிதமாக மின்கம்பி ஒன்று அறுந்து அதன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் (VAO) தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நிலைமையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

விவசாயக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பசுமாடு உயிரிழந்ததால் வேலு மேஸ்திரி பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளார். எனவே, மின்சாரத் துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்குவதோடு, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கப் பழுதடைந்த மின்கம்பிகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔