சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி, பெரம்பலூரில் உள்ள ராம் மற்றும் ராஜா தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கு வளாகத்தில் காலை முதலே அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்துத் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், 'சூப்பர் ஸ்டார் வாழ்க' கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் திருவிழா போன்ற சூழல் நிலவியது.

