இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான டிசி திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், வாமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் தொடர்ந்து முன்னேறி வரும் டிசி திரைப்படம், வெளியாகி 12 நாட்களில் உலகளவில் ரூ.87 கோடி வசூல் செய்துள்ளதாக புதிய பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

