சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையான நிலையில், இன்று விலை சற்று குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சிறிய அளவில் நிம்மதியை அளித்துள்ளது.
வெள்ளி விலையும் குறைவு
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரமாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் செய்வது அவசியம்.

