Settings

முகப்பு/விவசாயம்/மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்மழையால் 2,500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின: வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை :-
விவசாயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்மழையால் 2,500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின: வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை :-

🕒 25 அக்., 2026, 09:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்மழையால் 2,500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின:  வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை :-

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது நடவு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தினந்தோறும் மிதமான மழை பெய்து வருவதால் ஒரு வாரத்திற்குள் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் மழை நீரில் சூழ்ந்துள்ளன. மாவட்ட முழுவதும் சுமார் 2500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் சம்பா பருவத்திற்காக சுமார் 30 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீரால் சூழப்பட்டுள்ளது. மூழ்கியுள்ள நடவு பயிர்களை எடுத்து காண்பித்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், வயலில் தேங்கியுள்ள நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை மேலும் வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வயலில் தேங்கியுள்ள மழை நீர் வடியாவிட்டால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றும் வகையில், பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔