Settings

முகப்பு/விவசாயம்/அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம்
விவசாயம்

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம்

🕒 25 அக்., 2026, 09:33 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பாட்டு பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருவது விவசாயிகள் மத்தியில் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பாசனத்திற்கு வரவில்லை, நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தவில்லை, கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்றாக இருந்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியாக திருமானூர் ஒன்றியமும், தா.பழூர் ஒன்றியமும், விவசாயம் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தா.பழூர் டெல்டா பகுதியான கடம்பூர், முட்டுவாஞ்சேரி, கோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலி கருப்பூர் ஆகிய கிராமங்களில் தற்போது நடப்பு சம்பா சாகுபடிக்காண நடவு பணிகளை சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட உள்ளனர். இந்த நிலையில் தற்போது விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பெரும்பாலும் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நடவுப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆட்கள் பற்றாக்குறை இடங்களில் விவசாயிகள் மிஷின் நடவு பணிகளையும் , வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்தும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக வாழைக்குறிச்சி கிராமத்தில் விவசாயி வேதநாயகம் என்பவரது நிலத்தில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவுகளை கொடுத்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விவசாய நடவு பணிகளில் மேற்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது மொழியான பெங்காலி மொழியில் பாட்டு பாடி சக தொழிலாளர்களை உற்சாகப்படுத்தி நடவு செய்து வருவது விவசாயிகள் மத்தியில் வெகுவாக கவர்ந்து வருகிறது. பின்னர் இதுகுறித்து விவசாயி தெரிவிக்கையில்:- ஒரு காலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்கள் பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது. காரணம் 100 நாட்கள் வேலை திட்டத்திற்கு ஆட்கள் சென்று வருவதால் இங்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. நாங்கள் அதே திட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம் அவர்களுக்கு ஊதியத்தை அரசு ஒரு பகுதியாகவும் நாங்கள் ஒரு பகுதியாகவும் தருகிறோம் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக ஆற்றல் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாததாக விட்டது. இதன் காரணமாக வட மாநிலத் தொழிலாளர்களை நாட வேண்டிய சூழல் இங்குள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனது வயலில் நடவு பணிகளை பாட்டு பாடி உற்சாகமாக மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை எனது சொந்த இடத்திலே வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். பாரம்பரிய தொழிலை எப்படி விட முடியும். தற்போதுள்ள தமிழக முதல்வர் ஆட்சிக்கு வரும் முன்னர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார், நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்துவேன் என்றார். ஆனால் இதுவரை அது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் விஜய் வெளியிடவில்லை ‌. மேட்டூர் அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரை பாசனத்திற்காக வரவில்லை. இது போன்ற நிலை எந்த ஆண்டிலும் ஏற்படவில்லை. விவசாயிகள் இவ்வளவு போராடியும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை எனவே நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட அடுக்கடுக்கான கோரிக்கைகளை தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔