வேலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் முறையான திருத்தங்கள் செய்யப்படாமல் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை மட்டுமே நடக்கிறது. இதனை கண்டிக்கத்தக்கது தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும். கர்நாடக மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் இவான் டிசோசா வேலூரில் பேட்டி .. கர்நாடக மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் இவான் டிசோசா வேலூரில் காங்கிரஸ் தலைமை அலுவ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாக்குரிமையைப் பறிக்கும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. மங்களூரு தெற்குத் தொகுதியில் மட்டும் 18,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மை, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வரும் நவம்பர் 1-ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த மெகா பேரணியில் நாடு முழுவதிலுமிருந்து காங்கிரஸ் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடு நிலையாகச் செயல்படத் தவறியதை எதிர்த்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசியலமைப்பையும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளையும் காப்பாற்றும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது. காங்கிரஸ் கட்சி வெறும் ஆட்சி அதிகாரத்திற்காக மட்டும் போராடாமல் நாட்டின் பொது மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காக்கப் போராடுகிறது.




