திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திறப்பு விழா நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட பணிகளுக்கு தவெக திறப்பு விழா நடத்துவது ஏற்புடையதல்ல. மற்றவர்கள் திட்டமிட்ட பணிகளுக்கு ரிப்பன் வெட்டுவதன் மூலம், அந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரராகிவிட முடியாது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்கள் நலனுக்காக திமுக அரசு முன்னெடுத்த திட்டங்களைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் கலாச்சாரம் கண்டிக்கத்தக்கது என்றும், உண்மையான உழைப்பிற்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

