விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மூன்று திரையரங்குகளில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம் வெளியானது. படம் வெளியான மூன்று திரையரங்குகளை சுற்றிலும் ரசிகர்கள் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி படங்களுடன் கூடிய ஏராளமான வாழ்த்து பதாகைகளை வைத்திருந்தனர். சத்திரப்பட்டி மேம்பாலம் அருகே உள்ள தியேட்டர் அருகே குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் முதல்வரின் வாழ்த்து பதாகைக்கு பால் அபிஷேகம் செய்தனர். ரசிகர்களின் இந்த கொண்டாட்டத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி, காரில் அமர்ந்தவாறு பார்வையிட்டார். பின்னர் மற்றொரு திரையரங்குக்கு சென்ற அவர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய பின் திரையரங்கில் அமர்ந்து படத்தை ரசித்துப் பார்த்தார். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் சத்திரப்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசியல்
ஜனநாயகன் திரைப்படத்தை ராஜபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ரசிகர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். முன்னதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்வையிட்டு இனிப்பு வழங்கினார்.
The News Outlook
🕒 23 ஜூலை, 2026, 07:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
