சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை...!* விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாக தவெக அரசை கண்டித்து விருதுநகரில் அதிமுக சார்பாக வரும் 14ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக இன்று சிவகாசியில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விவசாயிகளுக்கு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வதாக பால் வார்ப்பது போல் சொல்லிவிட்டு விவசாயிகளை வஞ்சித்ததால் அதிமுக முதன் முறையாக தவெக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளது டெல்டா வறட்சியில் காய்ந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது கட்ட முன்வந்துள்ளது மேகதாது அணையை கட்டுவதை தடுக்க சர்வ கட்சி ஆலோசனை நடத்தாமல் தவெக அரசு மேகதாது கட்டுவதை தடுக்காமல் மறைமுக ஆதரவு தருவது போல் செயல்படும் ஆளும் கட்சியை கண்டித்து விருதுநகரில் அதிமுக சார்பாக வரும் 14ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம் விஜய் முதல்வராகி மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இரண்டு மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டார்கள்நிர்வாக செலவிற்கு கடன் வாங்கும் கேவலமான அரசாக தவெக அரசு இருக்கிறது எல்லோர் மீதும் பழி சுமத்தி விட்டு தான் உத்தமர் போல் சினிமாவில் நடித்தது போல் நடித்ததால் மக்கள் ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் சினிமாவைப் பார்த்து ரசித்த மக்கள் சினிமாவைப் போல் விஜய் நமக்கு பாதுகாப்பாக இருப்பார் என நினைத்தார்கள் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த விஜய் மக்களைப் பற்றி கவலைப்படாமல் தமக்காக சினிமா எடுத்தவர்கள், தன்னை வைத்து சினிமா தயாரித்தவர்கள், தன்னோடு நெருங்கி பழகியவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆட்சியில் பங்கு கொடுத்து ஒரு அவமானமான ஆட்சியை கொடுத்து வருகிறார் தவெக ஆட்சியில் தமிழக மக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும் பாதிக்கப்பட்டும் வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் இன்றைய தவெக அரசு முழித்துக் கொண்டிருக்கிறது முதல்வர் விஜய் அவர்களும் தவெக அமைச்சர் அவர்களும் கதைகளை அளந்து கொண்டிருக்கிறார்கள் கடந்த ஆட்சியாளர்கள் பணத்தை எல்லாம் சுருட்டி விட்டார்கள் என நாடகம் போடுகிறார்கள் திமுக எப்படி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்ததோ அதேபோல் தவெக ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய் முதலமைச்சராக வந்ததே விபத்து என சொல்லும் அளவிற்கு இன்றைக்கு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறி உள்ளதுதவெக ஆட்சி நீடிக்கின்ற ஆட்சி கிடையாது, மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஆட்சி கிடையாதுமிகப் பிரமாண்டமான தனி பெரும்பான்மையை பெற்று விஜய் முதல்வராகவில்லைஅரசியல் வல்லுநர்கள், அரசியல் விமர்சகர்களும் விஜய் ஆட்சியை கிண்டலடிக்கிறார்கள்யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லாத அரசாக தவெக அரசு இருக்கிறது தவெக அரசுக்கு ஆதரவாக பேசிய அரசியல் வல்லுநர்கள் கூட தற்போது இந்த ஆட்சி தேவையில்லை என பேசுகிறார்கள் ஒரு ஆட்சி வந்து 3 மாதத்திற்குள் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை பெற்றுள்ளது என்றால் அது விஜயின் ஆட்சி தான்நிர்வாக செலவிற்காக கடன் வாங்கும் இழிநிலை வரக்கூடாது என்றால் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தால் இது போன்ற அவல நிலை ஏற்பட்டு இருக்காதுஎடப்பாடியாருக்கு சாமர்த்தியமான அரசியல் தெரியும், வரியே இல்லாத பட்ஜெட்டை எடப்பாடி பழனிச்சாமிக்கு போட தெரியும் தான் ஆட்சி செய்த நான்கரை ஆண்டுகளில் நான்காண்டுகளில் எதிர்ப்புகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி பழனிச்சாமியின் திறமையான ஆட்சி எங்கே, இன்றைக்கு எல்லாம் இருந்தும் ஆளத் தெரியாத விஜய்யின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி எங்கேகாவல்துறையையும், மாவட்ட ஆட்சியரையும் கையில் வைத்துக் கொண்டு பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுத்தால் பட்டாசு தொழிலாளர்களையும் பட்டாசு தொழிலையும் பாதுகாக்க அதிமுக போராட்டக்களத்தில் இறங்கும் சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது பட்டாசு தொழில் இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது தொழில் செய்து உழைப்பவர்களை சாலையில் இறங்கி போராட வைத்து விடாதீர்கள் நான் நினைத்தால், நான் ஆரம்பித்து வைத்தால் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலாளர்களுக்கான போராட்டம் ஓயாது, அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுவோம்விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் பாழாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் இந்த ஆட்சியை நம்பி கெடுத்து விடாதீர்கள்எங்கு சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்யப்படுகிறதோ அங்கு சென்று ஆய்வு நடத்துங்கள், உரிமம் பெற்று முறையாக பட்டாசு தயாரிப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பது என்ன நியாயம் தொடர்ந்து ஆய்வு நடத்தினால் எப்படி பட்டாசு உற்பத்தி செய்ய முடியும் நேர்மையாக தொழில் செய்யும் எங்கள் பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க நினைத்தால் அதை தடுக்கும் இடத்தில் கே. டி ராஜேந்திர பாலாஜியாகிய நான் இருப்பேன், மாறமாட்டேன் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சிவகாசி பகுதி மக்களை காக்க களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் எங்கெங்கு இருந்தோ அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள், ஆனால் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நாங்கள் செய்த தொழிலை கெடுக்க நினைத்தால் அதை தடுக்கும் இடத்தில் உள்ள அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலை பெற்று போராட்டத்தை அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.
அரசியல்
அவமானமான ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் விஜய் – கே.டி.ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!
The News Outlook
🕒 11 ஆக., 2026, 05:09 PM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு

