இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த நவம்பர் 12 முதல் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, கழக நிர்வாகிகளும் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் (BLA-2) இந்தப் பணிகளில் முழு ஈடுாட்டுடன் செயல்பட மாவட்டக் கழகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் 21 (சனிக்கிழமை), நவம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்தச் சிறப்பு முகாம்களில் கழகத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வார்டு கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளை மேற்கொள்வதோடு, மாற்றுக்கட்சியினரின் முகவர்கள் மேற்கொள்ளும் வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கல் முறைகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவுறுத்தலானது ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.









