நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள 39 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் புதிதாக அமையக்கூடிய 59 மக்களவை தொகுதிகளின் உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது.
மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் முன்மொழிவின்படி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தமிழகத்திற்கான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்தின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயரக்கூடும் என நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தேசமாக வெளியாகியுள்ள 59 தொகுதிகள்
தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் அமையக்கூடியதாக கூறப்படும் தொகுதிகளின் பெயர்கள் வருமாறு:
- திருத்தணி
- திருவள்ளூர்
- சென்னை வடக்கு
- சென்னை கிழக்கு
- சென்னை மத்திய
- சென்னை தெற்கு
- சென்னை மேற்கு
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- வேலூர்
- திருப்பத்தூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- வந்தவாசி / ஆரணி
- திண்டிவனம்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- சிதம்பரம்
- ஓசூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
- மேட்டூர்
- ராசிபுரம்
- நாமக்கல்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
- திருப்பூர்
- தாராபுரம் / பழனி
- பொள்ளாச்சி
- கோவை கிழக்கு
- கோவை மேற்கு
- நீலகிரி
- கரூர்
- பெரம்பலூர்
- அரியலூர் / லால்குடி
- திருச்சிராப்பள்ளி
- தஞ்சாவூர்
- கும்பகோணம்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- திருநெல்வேலி
- நாங்குநேரி / கன்னியாகுமரி
- கன்னியாகுமரி / நாகர்கோவில்
- தென்காசி
- சிவகாசி
- விருதுநகர்
- தேனி
- மதுரை கிழக்கு
- மதுரை மேற்கு
- திண்டுக்கல்
மேற்கண்ட பட்டியல் உத்தேசமானது மட்டுமே. தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட நடைமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்குப் பிறகே இறுதி தொகுதிகளின் எண்ணிக்கையும் பெயர்களும் உறுதி செய்யப்படும். தற்போது தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன; மறுவரையறை திட்டத்தில் 59 ஆக உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

