சென்னை: நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காகங்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தை ஆனந்த் அண்ணாமலை இயக்கியுள்ள நிலையில், மாயவரம் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முழு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளதால், தற்போது பின்னணி இசை, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்த அறிவிப்பு, நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
'காகங்கள்' திரைப்படத்தின் கதை, நடிகர்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான கூடுதல் தகவல்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

