Settings

முகப்பு/செய்திகள்/மகள்களுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு: நெல்லையில் ஷாக் சம்பவம்!
செய்திகள்

மகள்களுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு: நெல்லையில் ஷாக் சம்பவம்!

🕒 4 நவ., 2026, 03:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மகள்களுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு: நெல்லையில் ஷாக் சம்பவம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் ஹெல்மட் அணிந்து வந்த நபர் பட்டப்பகலில் 14 பவுன் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 14 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்வாடி அருகிலுள்ள புலியூர்குறிச்சியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி நம்பி செல்வி (39). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாராஜன் பழக்கடை நடத்திவரும் நிலையில், நம்பி செல்வியும் அவருக்கு உதவியாக உள்ளார். இவர்களது மகள்கள் ஏர்வாடியில் உள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர். வழக்கம்போல் நம்பி செல்வி தனது மகள்களை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் இரு மகள்களையும் மொபட்டில் அழைத்துக்கொண்டு நம்பி செல்வி வீடு திரும்பியுள்ளார். புலியூர்குறிச்சி ஊருக்கு முன்பாக சுமார் 50 மீட்டர் தூரத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட அந்த நபர், நம்பி செல்வியின் மொபட் அருகில் தனது வாகனத்தை இயக்கி, திடீரென அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியைப் பறித்துள்ளார்.

இதில் ஒரு பவுன் நகை மட்டும் நம்பி செல்வியின் கையில் சிக்கிய நிலையில், மீதமுள்ள 14 பவுன் நகையுடன் கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளான். நம்பி செல்வி கூச்சலிட்ட போதிலும், ஆள் நடமாட்டம் இல்லாததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை.

இதுகுறித்து நம்பி செல்வி அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஹெல்மட் அணிந்து தப்பிய கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!செய்திகள்

அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Rajan🕒 நவ. 23
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔