ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வண்ணாங்காட்டு வலசு பகுதியில், சாலையோரம் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர் அப்பகுதியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வந்த ராசு (45) என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெருந்துறை போலீசார், ராசு உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.









