Settings

முகப்பு/செய்திகள்/சோகம்: மர்ம காய்ச்சலுக்கு 48 மணி நேரத்தில் 5 வயது சிறுவன் பலி!
செய்திகள்

சோகம்: மர்ம காய்ச்சலுக்கு 48 மணி நேரத்தில் 5 வயது சிறுவன் பலி!

🕒 23 நவ., 2026, 04:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சோகம்: மர்ம காய்ச்சலுக்கு 48 மணி நேரத்தில் 5 வயது சிறுவன் பலி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான 5 வயது சிறுவன் 48 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான 5 வயது சிறுவன் 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேரன்மகாதேவியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுடலை (38) - ரேவதி தம்பதியினருக்கு சுபஸ்ரீ (7) என்ற மகனும், கோமதன் (5) என்ற மகனும் உள்ளனர். சுபஸ்ரீ அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பும், கோமதன் யுகேஜியும் படித்து வந்தனர். இந்நிலையில், சிறுமி சுபஸ்ரீக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து, அவர் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 20ஆம் தேதியன்று சிறுவன் கோமதனுக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு காய்ச்சல் அதிகரித்ததால், பெற்றோர்கள் கோமதனை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனுக்கு ஊசி போடப்பட்டுள்ளது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் சிறுவனுக்கு வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். அங்கு சிறுவனின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை அடுத்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் சிறுவன் கோமதன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 48 மணி நேரத்திற்குள்ளாகவே சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணைசெய்திகள்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

Vijayaragavan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔