வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தேசிய வைட்டமின் ‘ஏ’ குறைபாடு தடுப்புத் திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரி, ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லீலா அலெக்ஸ் நேரில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவத்தை வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
குழந்தைகளின் கண்பார்வைத் திறன் மேம்படவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் இந்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதியுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் இதனைத் தவறாமல் பெற்று பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

