Settings

முகப்பு/நகரங்கள்/வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு
நகரங்கள்

வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு

🕒 26 அக்., 2026, 12:08 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு
✨

AI Highlights

  • •தொழுதூர் அணைக்கட்டிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளநீரில் வெள்ளாற்றுப் பகுதியில் சிக்கிய 9 பொருட்காட்சி ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு வெள்ளாறு பகுதியில் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளநீரில் சிக்கிய 9 பொருட்காட்சி ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து இன்று காலை 5:00 மணி நிலவரப்படி சுமார் 30,000 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது. லப்பைக்குடிக்காடு வெள்ளாறு பகுதியில் கடந்த 10 நாட்களாக ரோபோடிக் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. கடந்த 20ஆம் தேதியுடன் இப்பொருட்காட்சி நிறைவடைந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஊழியர்கள் அங்கிருந்த பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அணைக்கட்டிலிருந்து திடீரென அதிகளவு நீர் திறக்கப்பட்டதால், பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 9-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் லப்பைக்குடிக்காடு துணைத் தலைவர் ரசூல் அகமத் மற்றும் சலீம் ஆகியோர் தர்கா ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு உதவி கோரி அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் எந்தவித உயிர் சேதமின்றி மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔