விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது .இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்கம் பூமி என அழைக்கப்படுகிறது . மேலும் இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலல் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி எனவும் , மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
The News Outlook
🕒 26 ஜூலை, 2026, 04:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
