தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2,220 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்பெண்ணையாற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ அல்லது குளிக்கவோ கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்திலும் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

