திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, எம் புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் ஸ்ரீ ஸ்ரீ மகா மாரியம்மன் தக்ஷிணாமூர்த்தி பாலமுருகன் வைஷ்ணவி மகேஸ்வரி வேம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது திருக்கோயிலில் திருப்பணிகள் மற்றும் புதிய மண்டபங்கள் அமைக்கும் திருப்பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற்று வந்தது. பணியில் முடிவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18 -ஆம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு தீர்த்த குடம் எடுத்துவருதல், முதல்கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகபூஜைகள் நடைபெற்றன. இன்று யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்வில் காட்டுப்புத்தூர், தொட்டியம், ஸ்ரீ ராமசமுத்திரம் சின்னபள்ளிபாளையம், பெரிய பள்ளிபாளையம், சிலைபிள்ளையார் புத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் பிரசாதமும் வழங்கினர்
Spirituality
முசிறி அருகே எம் புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் - வெகு விமர்சியாக நடைபெற்றது.
The News Outlook
🕒 2 ஜூலை, 2026, 01:09 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
