திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் நகராட்சி இந்து தொடக்கப்பள்ளி எதிரில், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் வேலி அமைத்திருந்தார். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு புகார்கள் சென்றதை அடுத்து, அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள முன்கூறிய பள்ளியின் எதிரே பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களின் புகாரıன் அடிப்படையில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

