எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமாரின் My French Grammar புத்தக வெளியீட்டு விழா இன்று கோவையில் நடைபெற்றது. கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார். கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனரான இவர், 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டு மொழி பயிற்றுநராக உள்ளார். ஏற்கனவே இவர் My English Grammar, The Untold Secret of Success, My English Grammar ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனிடையே, கிருபாஷினியின் நான்காவது புத்தகமான My French Grammar புத்தக வெளியீட்டு விழா இன்று கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் மதிவாணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட, கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கிருபாஷினி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் இதுவரை மொழி தொடர்பாகவும், ஊக்கமளிக்கும் புத்தகங்களையும் எழுதியுள்ளேன். ஐரோப்பிய, ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே எனது எதிர்கால லட்சியம். மேலும், எங்களது பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளை பொதுமக்களுக்கு நாங்கள் பயிற்றுவித்து வருகிறோம். ஒருவர் இரண்டு மொழிகளுக்கு மேல் கற்கும்போது அவரது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இதனை நாம் அன்றாட வாழ்விலும் பார்க்க முடியும். எனவே, எந்த வயதினராக இருந்தாலும் பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம்," என்றார்.
Education
எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமாரின் My French Grammar புத்தக வெளியீட்டு விழா ..
The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 06:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

