விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வான கொட்டகை தெருவில் எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கூரை வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை என்பவரின் மனைவி கமலா (70) என்பவருக்கு காலில் பலத்த முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









