மயிலாடுதுறையில் விட்டு விட்டு பெய்த மழையால் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். அமைச்சர் வருவதற்கு முன்னதாக மழைநீர் தேங்குவதை கண்டுகொள்ளாத ஊழியர்கள், அவர் வருகை தந்ததும் வாயிலில் தேங்கியிருந்த தண்ணீரை அவசர அவசரமாக 'மாப்' (Mop) மூலம் அப்புறப்படுத்தினர்.
அமைச்சரின் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் தூய்மைப் பணி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆய்வின்போது ஐந்தாவது தளத்தில் உள்ள பெண்கள் மருத்துவ சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததைக் கண்டு அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.









