Settings

முகப்பு/செய்திகள்/மயிலாடுதுறையில் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 28 கிராமங்களில் பாதிப்பு
செய்திகள்

மயிலாடுதுறையில் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 28 கிராமங்களில் பாதிப்பு

🕒 26 அக்., 2026, 07:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

புயல் எச்சரிக்கை மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று (25ஆம் தேதி) முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, கொடியம்பாளையம், பழையாறு, திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், மாணிக்கப்பங்கு, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூர், சின்னமேடு உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

மீன்பிடிக்கச் செல்லாததால், 750-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் துறைமுகங்கள் மற்றும் ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔