Settings

முகப்பு/நகரங்கள்/வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

🕒 21 நவ., 2026, 12:56 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கிராமத்தில் சக்தி விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள இராமையன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 19ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வேத மந்திரங்கள் முழுங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

பின்னர், மேளதாளங்கள் முழங்க திருக்கோயில்களின் விமான கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.

இவ்விழாவில் இராமையன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், த.வெ.க மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இராமையன்பட்டி கிராம பொதுமக்களும், திருவள்ளுவர் தமிழ் மன்ற குழுவினரும் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔