Settings

முகப்பு/செய்திகள்/பட்டாசு கடை உரிமையாளர்களே உஷார்! அதிரடி ஆய்வு!
செய்திகள்

பட்டாசு கடை உரிமையாளர்களே உஷார்! அதிரடி ஆய்வு!

🕒 28 அக்., 2026, 07:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பட்டாசு கடை உரிமையாளர்களே உஷார்! அதிரடி ஆய்வு!
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு கடைகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மேலும், கடைகள் அமைப்பதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் மனோகரன் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இப்பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, அரசால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்துக் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔