Settings

முகப்பு/நகரங்கள்/எங்களை கருணை கொலை செஞ்சிடுங்க! பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்க கதறல்!
நகரங்கள்

எங்களை கருணை கொலை செஞ்சிடுங்க! பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்க கதறல்!

🕒 26 அக்., 2026, 10:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
எங்களை கருணை கொலை செஞ்சிடுங்க! பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்க கதறல்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கோரி மனு அளிக்க வந்த பொதுமக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஒருமையில் பேசியதுடன், வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி ஊராட்சி காளான் வட்டம் பகுதியில் வசிக்கும் 18 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். அப்பகுதியில் காலம்காலமாக வசித்து வருபவர்களுக்கு ஏற்கனவே 150-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ளவர்களுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்றும், மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ராஜா என்ற பொதுமச்சர், அதே பகுதியில் மற்றவர்களுக்கு எவ்வாறு பட்டா வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமக்களை ஒருமையில் பேசி வெளியே செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஐந்து தலைமுறைகளாகப் பட்டா கோரி வருவதாகவும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தங்களை கருணை கொலை செய்யுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔